மங்கம்மா திருச்செந்தூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அமைதியான, அழகிய சிற்றூர் அது. கிழக்கு ரத வீதியில்தான் காவேரியின் வீடு. ஊரின் அமைதிக்கு எதிர்மறையாக அந்த வீதியில் எப்போழுதும் மக்கள் கூட்டம் இருக்கும். அதற்குக், தேரடி வாசலில் கடை விரித்திருக்கும் காய்கறி வியாபாரிகளும், தெரு முனையில் அமைந்திருக்கும் இரண்டு பலசரக்குக் கடைகளும்தான் காரணம். கிராமத்து ‘ ஜனங்கள் ’ எல்லாம் ‘சமான் செட்டு’ வாங்க அங்கேதான் வருவார்கள். அது மட்டும் அல்லாமல், தேரடி மெயின் ரோட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால், பக்கத்து ஊர்களுக்கும் அது ஒரு சந்தை இடமாக அமைந்துவிட்டது. அன்று வெள்ளிக்கிழமை; காலை மணி பத்து இருக்கும். வாசலில் “அம்மா.. அ ம்மா” என்று ஒரு பெண்ணின் ஈன சுரத்தில் ஒரு குரல் ஒலித்தது அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்தாள் காவேரி. ஒரு இருபத்தைந்து வயது மதிக்கலாம்; மானிறமாக, பறட்டைத் தலையுடன், இடுப்பில் ஒரு குழந்தை, கையில் இரண்டு குழந்தைகளுமாக நின்றுகொண்டிருந்தாள் ஒரு கர்ப்பிணிப் பெண் . பெரிய வயிறு. வழக்கமாக வரும் பிச்சைக்காரி இல்லை. புதிய முகம்; காவேரி ...
Posts
Showing posts from February, 2018